டெல்லி முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்ட கொரோனா தொற்று உள்ளவர்கள் குறித்து ஒமர் அப்துல்லா கருத்து..
தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான கருத்தரங்கு மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் தற்போது இந்தியாவில் கொரோனா பெருமளவில் பரவியுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கேற்று திரும்பி உள்ளனர். இவர்களில் பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர், ஒமர் அப்துல்லா கூறுகையில், ‘டெல்லியில் நடைபெற்ற தப்லிக் – இ – ஜமாத், என்ற இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்தி, கொரோனா வைரசை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பியதே முஸ்லிம்கள் தான் என, குறை சொல்லக்கூடாது’ என்று தனது அந்த குறிப்பில் கூறியுள்ளர்.