உத்தரபிரதேசம் மாநிலம் புலந்தாகர் என்ற ஊரைச் சேர்ந்தவர் வகீல். இவரது மனைவி பெயர் யாஸ்மின். வகீல் உத்தரபிரதேச மாநிலம் சகரான் பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு தனது மனைவியையும் அழைத்து சென்று அவருக்கு தொழிற்சாலை நிர்வாகம் ஒதுக்கி கொடுத்த வீட்டில் இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து கணவன் – மனைவி இருவரையும் அந்த வீட்டை விட்டு காலி செய்யும் படி அந்த தொழிற்சாலை நிர்வாகம் கூறியது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து தனது 8மாத கர்ப்பிணியான தனது மனைவி யாஸ்மினுடன் சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வந்தனர். இந்தியா முழுவதும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் எப்படி செல்வது என்று தெரியாமல் சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என்று முடிவு எடுத்துள்ளனர்.
எனவே அவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களாக சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து மீரட் நகரை வந்தடைந்தனர்.
அவர்கள் கையில் பணம் எதுவும் இல்லாத காரணத்தால் இரண்டு நாட்களாக சாப்பிடவும் இல்லை. மிகவும் சோர்வான நிலையில் மீரட் பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்தனர். அவர்கள் நிலைமையை அறிந்த உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவ முன் வந்து அவர்களாகவே பணம் வசூலித்து அந்த தம்பதிகளுக்கு கொடுத்தனர். உள்ளூர் உதவி காவல் ஆய்வாளர் பெரம்பல்சிங்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தியை ஏற்பாடு செய்து அதில் இருவரையும் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 8மாத கர்ப்பிணி 100 கிமீ தூரம் இரண்டு நாட்களாக் உணவு இல்லாமல் நடந்தே சென்ற சம்பவம் அனைவரையும் சற்று புருவம் சுழிக்க வைக்கிறது…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…