கொரோனோவால் நிறை மாத கர்ப்பிணி 2 நாட்களாக உணவின்றி 100 கிமீ நடந்த அவலம்… வீட்டை காலி செய்ய சொன்னதால் பணமில்லாமல் சொந்த ஊருக்கு பயணம்..

Default Image

உத்தரபிரதேசம்  மாநிலம் புலந்தாகர் என்ற ஊரைச் சேர்ந்தவர்  வகீல். இவரது மனைவி பெயர் யாஸ்மின். வகீல் உத்தரபிரதேச மாநிலம் சகரான் பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு தனது  மனைவியையும் அழைத்து சென்று  அவருக்கு தொழிற்சாலை நிர்வாகம்   ஒதுக்கி கொடுத்த வீட்டில் இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில்,  இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து கணவன் – மனைவி இருவரையும் அந்த வீட்டை விட்டு  காலி செய்யும் படி அந்த தொழிற்சாலை நிர்வாகம் கூறியது. இதனால்  இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து தனது 8மாத கர்ப்பிணியான தனது மனைவி  யாஸ்மினுடன்  சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வந்தனர். இந்தியா முழுவதும் போக்குவரத்து  வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் எப்படி செல்வது என்று தெரியாமல்   சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என்று முடிவு எடுத்துள்ளனர்.
எனவே அவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களாக சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து மீரட் நகரை  வந்தடைந்தனர்.

கொரோனாவால் ஊரை விட்டு வெளியேறி 8 மாத ...

அவர்கள் கையில் பணம் எதுவும் இல்லாத காரணத்தால்  இரண்டு நாட்களாக சாப்பிடவும் இல்லை. மிகவும் சோர்வான நிலையில் மீரட் பேருந்து  நிலையம் அருகே வந்து அமர்ந்தனர். அவர்கள் நிலைமையை அறிந்த உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவ முன் வந்து அவர்களாகவே  பணம் வசூலித்து அந்த தம்பதிகளுக்கு  கொடுத்தனர். உள்ளூர் உதவி காவல் ஆய்வாளர் பெரம்பல்சிங்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தியை  ஏற்பாடு செய்து அதில் இருவரையும் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 8மாத கர்ப்பிணி 100 கிமீ தூரம் இரண்டு நாட்களாக் உணவு இல்லாமல் நடந்தே சென்ற சம்பவம்  அனைவரையும்  சற்று புருவம் சுழிக்க வைக்கிறது…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்