உலகம் முழுதும் பல ஆயிரம் மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் நம் நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்’ என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, நம் நாட்டில் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்ததை அடுத்து, அந்த மருந்தினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தற்போது மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவர்களின் பரிந்துரைப்படி, ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த மருந்தை தவறாக பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், இந்திய மருந்து மற்றும் ஒப்பனை பொருள் சட்டத்தின் படி மத்திய அரசால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து உள்ள எந்த வகையான மருந்துப் பொருட்களையும் சில்லரை விற்பனை செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…