கொரோனோ பாதுகாப்பு ஊரடங்கு…சரக்கு ரயிலில் பதுங்கி சென்ற 50க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது…
உயிர்கொல்லியான கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் 887 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனோ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ரெயில் சேவைகள், பேருந்து சேவை, விமான சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் சரக்கு ரெயிலில் சிலர் பதுங்கி வருவதாக உத்தரபிரதேச மாநில ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த மாநிலத்தின் இட்வா ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் வந்த போது அதில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது அந்த சரக்கு ரெயிலில் பதுங்கி இருந்த 50-க்கும் அதிகமானோரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய அதிரடி விசாரணையில் அவர்கள் அனைவரும் உத்தரபிரதேசம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இவ்வாறு சரக்கு ரெயிலில் பதுங்கி பயணம் செய்தனர் என்று விசாரனையில் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பிடிபட்ட நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.