ஊரடங்கு உத்தரவை ஆய்வு செய்த மம்தா பேனர்ஜி… செங்கலை எடுத்து சாலையில் வட்டமிட்டு சமுக இடைவெளியை அறிவுறுத்தி அசத்தல்….

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று சாலையில் வட்டம் போட்டு காட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சமுக இடைவெளியை அறிவுறுத்தி உள்ளார்.இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும், அவர்கள் குறைந்தபட்சம் 1மீ இடைவெளி விட்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கொல்கத்தாவின் ஜன் பஷார் பகுதிக்கு சென்ற அவர் வர்த்தகர்கள், விற்பனையாளர்களிடம் ஆய்வு செய்தார். அப்போது அத்தியவாசிய பொருட்கள் வாங்கும் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று சாலையில் செங்கல் கல்லை எடுத்து வட்டமிட்டார். பொதுமக்களின் நலனுக்காக சாலையில் அவரே செங்கலால் வட்டமிட்ட செயலை பொதுமக்கள் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றனர்
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025