உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த செவ்வாயன்று கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி., மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழு அப்பெண்ணை கவனித்து வந்தனர். இந்நிலையில் புதனன்று அவருக்கு நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார். குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. அதில் மூன்று குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஒரு குழந்தை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சையில் உள்ளது. பிரசவ தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்ததால் அவை 980 கிராம் முதல் 1.5 கிராம் வரையிலான எடைகளுடன் இருந்ததாக தெரிவித்தனர். நான்கு குழந்தைகளின் மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்காக நுண்ணுயிரியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…