கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்! கவச உடையோடு நடனமாடும் வீடியோ!

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர், கவச உடையோடு நடனமாடும் வீடியோ.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மருத்துவர்கள் அனைவரும், இரவுபகல் பாராமல், கண்விழித்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் ரிச்சா நேகி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார்.
இவர், ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி என்ற பாடலுக்கு, கவச உடையுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவாக அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை 10 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடுமையான காலங்களில் கூட நம்மை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காகவே கவச ஆடையிலும் நடனம் ஆடியதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025