ஜார்கண்ட் எம்.எல்.ஏ, மந்திரிக்கு கொரோனா – தன்னையே தனிமை படுத்திகொண்ட முதல் மந்திரி!

ஜார்கண்ட் மாநிலத்தில் மந்திரி மற்றும் எம்.எல்.ஏ க்கு கொரோனா உறுதியானதை அடுத்து தன்னை தானே தனிமை படுத்தி கொண்ட முதல் மந்திரி.
ஜார்க்கண்டில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி தான் நடந்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் ஜார்கண்டிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அங்கு தற்பொழுது எம்.எல்.ஏ மற்றும் மந்திரிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தானாகவே தன்னை வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளார். அவரது வீட்டிற்கு பிறர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது பணிகளில் தொடர்ந்து ஈடு படுவேன் என அவர் கூறியுள்ளர்.