முதல் பலி..ராஜஸ்தானில் தீவிரமடையும் கொரோனா!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்த 60 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் 68 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் 60 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் நிகழ்ந்த முதல் பலி இதுவாகும். மேலும் ராஜஸ்தானில் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.