கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் அவரவர் வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி, ஏப்ரல் – ஜூன் வரையிலான 3 மாத செலவினங்களுக்காக ரூ.2042 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட்டாக பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பேரவையில் உரையாற்றிய முதல்வர் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.பின்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ரூ.995 கோடி நிதி வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்த அவர் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே புதுச்சேரி மக்களுக்கு அரசு உதவும் நோக்கில், அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் இன்று முதல் ரூ.2,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…