இந்தியாவில் 21 வயது முதல் 40 வயது இடைப்பட்டவர்களே 42 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த வயது விவரக்குறிப்பு பகுப்பாய்வை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தகவல்:
கொரோனாவால் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். நடுத்தர வயதுடையவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறிப்பிட்ட அவர் 9% சதவீத பாதிப்புகள் 0-20 வயதுக்கு இடைப்பட்டவை என்றும்; 42% சதவீத பாதிப்புகள் 21 முதல் 40 வயது வரையும்; 33% பேர் 41 முதல் 60 வயது வரை பாதிக்கப்பட்டுள்ளனர்;மேலும் 17% சதவீத 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் 2,902 பேர் கொரோனா பாதிப்புகளில் 58 நோயாளிகள் ஆபத்தானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும். இவற்றில் பெரும்பாலானவை மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் கேரளாவில் பாதிப்புகள் உள்ளன என தெரிவித்த அவர் வயதானவர்கள் மற்றும் கொமொர்பிட் நிலைமை உள்ளவர்கள் இத்தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இருதய மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களும் இத்தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள். இருதயம் மற்றும் சீறுநீரக ஆபத்து அதிகம் உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் தெரிவித்த சுகாதாரத்துறை இணை செயலாளர் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் விளைவு இரு மடங்கு மிகக் குறைவாக உள்ளது. இருந்தாலும் இத்தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதிலும், அன்றாட யுத்தத்தை நடத்துவதிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு தவறும் நம்மை எதிர்த்துப் போரில் பின்னுக்குத் தள்ளும் திறன் கொண்டது என்று தெரிவித்தார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…