டெல்லியில் கொரோனா வைரஸ்! வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த புதிய விதிகள்!
டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த புதிய விதிகள்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
- கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், நோயின் தீவிர தன்மை குறித்து அறிந்து கொள்வதற்காக கொரோனா பரராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
- அதே சமயம் இவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் அயலார் பாதுகாப்பிற்காக இரண்டு அறைகளுடன் கூடிய தனி கழிப்பறை உள்ளதா என ஆய்வு செய்து வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.
- கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபருக்கு, மிதமான பாதிப்பா அல்லது கடுமையான பாதிப்பா என மருத்துவ அதிகாரியின் உதவியோடு பரிசோதித்து அறிந்துகொள்ளப்படும்.
- கொரோனா பாதிப்பு உள்ள நபருடன் தொடர்பில் இருந்த நபருக்கு அறிகுறி இருந்தாலும், இல்லாவிட்டாலும் இரண்டு அறைகள் மற்றும் தனி கழிப்பாறை உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.
- லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் இல்லாதபட்சத்தில், அவர்கள் கொரோனா பாராமாரிப்பு மையத்திற்கு மாற்றப்படுவர்.
- கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சோதனை மையத்தில், ஆக்சிமீட்டர் வாழங்கப்படும்.
- வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு, ஆக்ஸிமீட்டர் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி வழங்கப்படும்.
- வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் தோன்றினால், மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்.
- வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் மற்றும் ஆலோசனையை பெற்றுக் கொள்ள தொலைபேசி எண் ஆகியவை வழங்கப்படும்.