ஊரடங்கு நீட்டிப்பா ? பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

Default Image

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் தான் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ஊரடங்கு நீட்டித்தாலும் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினமும் இருந்து வருகிறது.

எனவே இன்று  பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லையா ? என்பது குறித்து இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்