கொரோனா :1.50 கோடி நிவாரண நிதி அளித்த டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி கம்பீர்
இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக நாட்டு மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
பிரதமரின் அழைப்பை அடுத்து அரசியல கட்சிகள்,அரசியல் தலைவர்கள்,ராணுவம்,திரையுலகம்,கிரிக்கெட் வீரர்கள் , தொழிலதிபர்கள் என பலரும் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி ஆன கவுதம் காம்பீர் நிவாரண நிதியுதவியாக டெல்லி முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சத்தையும் மற்றும் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடியையும் வழங்கியுள்ளார்.