116 கோடி..யை கொடுத்தது துணை ராணுவப்படை!ஆபத்பாண்டவனாக எப்பொழுதும் காக்கும் தெய்வங்கள்-பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று துணை ராணுவப் படையினர் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்கினர்.
கொரோனா வைரஸ் மிக வேகம் இந்தியாவில் பரவி வருகிறது இதுவரை வைரஸ்க்கு 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர்.நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து அமலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தவிர வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.சமீபகாலமாகவே சரிவை நோக்கிய இந்திய பங்குசந்தைகளுக்கு தற்போது இந்த சூழ்நிலை மேலும் தலைவழியை கொடுத்துள்ளது.ஊரடங்கு..கொரோனா பாதிப்பு காரணமாகவும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வைரஸ் தொற்றைத் தடுக்க ஆகும் செலவுகள் என பல சிக்கல்களில் சிக்கியுள்ளது இந்தியா. இதனைச் சமாளிக்கவே PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்தார்.பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் அவர் அறிவித்த வங்கிக் கணக்கிற்கு நிதியுதவினை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அவருடைய அழைப்பை தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் உதவிகள் செய்யத் தொடங்கி உள்ளனர்.இந்நிலையில் எல்லைகளில் நின்று ஆபத்துக்களை தடுத்து நாட்டை காப்பது மட்டுமல்லாமல் உள்நாட்டில் எதாவது ஆபத்து ஏற்பட்டால் அங்கும் களமிறங்குவோம் என்று ராணுவப்படைவீரர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அதன்படி துணை ராணுவப் படையினர் தங்கள் ஒரு நாள் சம்பளத்தைகொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.இதன்படி மொத்தம் 116 கோடி ரூபாய் நிதியை துணை ராணுவத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பெற்றுக் கொண்ட அமித் ஷா துணை ராணுவப்படையினக்கு தனது மனதார நன்றியினை தெரிவித்தார்.
ஆபத்து என்றால் ஒலிந்து கொள்பவர்களுக்கு மத்தியில் ஆபத்தை நோக்கி நெஞ்சை நிமிர்த்தி களமிரங்கும் ராணுவப்படையினர் உண்மையில் நாட்டை காக்கின்ற காக்கும் தெய்வங்கள் என சமூகவலைதளங்களில் பொதுமக்கள் தங்களது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.