144 தடை..ஏன் வெளிய வந்தீங்க..கேட்ட காவலை கடித்து குதறிய இளம்பெண்!

Published by
kavitha

144 தடை உத்தரவை மீறி  மேற்கு வங்கத்தில் சாலையில் பயணித்த இளம்பெண்ணை பிடித்த காவல் அதிகாரியின் கையை பிடித்த கடித்தது மட்டுமல்லாமல் தனது பழைய காயத்தை கடித்து அந்த இரத்தத்தை காவல் அதிகாரியின் சட்டையில் பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. மேலும் ஒரே நாளில் 100க்கும் அதிகமான மக்கள் மடிந்து வருகின்றனர்.என்பதை இத்தாலி மூலம் பார்த்து வருகிறோம் அதே போல் ஸ்பெயின், தென்கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளிலும் பாதிப்பு  அதிகமாகத்தான் இருந்து வருகிறது.உலகளவில் வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை 21,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரிக்க துவங்கி உள்ளது அதன்படி கடந்த 2 நாட்களாக 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 12 பேர் மடிந்துள்ளனர்.மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் இதன் பாதிப்பை நாம் கட்டுக்குள் கொண்டு வர தவறும் பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க இந்தியா தயாரக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இதனை எல்லாம் தடுக்கவே மத்திய,மாநில அரசுகள் எல்லாவித வழிகளையும் நடைமுறைப்படுத்தி நாட்டு மக்களை பாதுக்காக்கவும்,வைரஸ் பாதிப்பை  தடுக்கவும் பல முயற்சிகளை முன்னெச்செரிக்கைக்களை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாடும் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது.பிரதமர் ,முதல்வர்கள்,உள்ளிட்ட அனைவரும் மக்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால் வைரஸின் வீரியத்தை அறியாமல் அதனை விளையாட்டாக கருதி பலரும் விழிப்புணர்வு இன்றி சாலைகளில் சுற்றி திருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.ஒரு நிமிடம் நாம் நாட்டில் எத்தனை பேர் உள்ளனர் அவர்களுக்கு எல்லாம் வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பாட்டால் நாடு தாங்குமா??? சிந்தியுங்கள் இவ்வாறு இருக்க  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தான் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் பலியான சூழ்நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்க பட்ட நிலையிலும். ஒரு காரில் பெண் ஒருவர் நேற்று மதியம் 12.30 மணிக்கு தனது நண்பர் ஒருவருடன் பேலிகுஞ்ஜேவிலிருந்து சால்ட் லேக் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அவரை போலீஸார் கைகாட்டி நிறுத்தி எங்கே போகிறீர் என அவர்களிடம் கேட்டனர்

அதற்குஅப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறிய நிலையில் சரி டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை கொடுங்கள் என்று காவல் அதிகாரி ஒருவர் கேட்ட போது அதை அவர்கள் காட்டவில்லை. இதனால் போலீஸார் அவர்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் உடனே காரை விட்டு இறங்கி போலீஸ்காரரை திட்டி கடித்து குதறினார்.இதன் பின் தனது பழைய காயத்தை கடித்த அப்பெண் அதில் ரத்தம் வரவழைத்து அந்த ரத்தத்தை வெள்ளை சீருடை போட்டிருந்த அந்த போலீஸ்காரர் மீது பூசி விட்டு என்னை பிடித்து தள்ளியதாகவும், என்னை காயப்படுத்தியதாக ஒருபொய்யான புகாரை உங்கள் மீது கொடுப்பேன் என்று போலீஸ்காரரை  அந்த இளம்பெண் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கொரோனாவால் நாடே அமைதியாக ஓய்வெடுத்தாலும் இரவு பகலாக தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் காவல் அதிகாரிகளை இளம்பெண் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என்று அனைவரும் கண்டித்து வருகின்றனர்.

Recent Posts

பிறந்தநாள் அதுவுமா மிரட்டலான லுக்.. ‘ராக்காயி’- யாக களமிறங்கிய நயன்தாரா.!

சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…

4 mins ago

பல பஞ்சாயத்துக்கு மத்தியில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம்.!

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…

46 mins ago

இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்றார்!

கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…

51 mins ago

பிற்பகல் 1 மணி வரை இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…

1 hour ago

வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது – மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…

2 hours ago

வார தொடக்க நாளில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…

2 hours ago