5 வது பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ்.!
கொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை வந்துள்ளது.
கொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை தற்போது வந்துள்ளது.ஆனால் இதற்கு முந்தைய மருத்துவ அறிக்கையில் பாசிட்டிவ் என வந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா தொற்று இருப்பது அறிந்த பின்னும் அலட்சியமாக இருந்தது மட்டுமன்றி பரவலுக்கு காரணமாக இருந்த கனிகா கபூர் மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவரை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் 5வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது இதில் பாசிட்டிவ் முடிவுகள் வந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் கனிகா கபூரின் உடல் சமநிலையில் இருப்பதாகவும்,கவலைப்பட தேவையில்லை என மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் ஆர்.கே திமான் தெரிவித்தார்.
இவ்வாறு இருக்க தனது இன்ஸ்டாகிராமில் இது குறித்து பகிர்ந்த கனிகா; விரைவில் நெகட்டிவ் இருந்து வெளியேறுவேன்;நேரத்தை நமக்கு நன்றாக பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது;அதே நேரத்தில் நேரம் நமக்கு வாழ்க்கையில் மதிப்பைக் கற்பிக்கிறது.
நீங்கள் பாதுக்காப்பாக இருங்கள்.உங்கள் அக்கறைக்கு நன்றி;ஆனால் ஐசியுவில் இல்லை;நான் நன்றாக இருக்கிறேன்.எனது அடுத்த சோதனை நெகட்டிவ் என்று நம்புகிறேன்.என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன்;என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் தற்போது கனிகாவிற்கு நடத்தப்பட்ட 5 வது சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.இருந்தாலும் அடுத்த சோதனையில் நெகட்டிவ் முடிவு வரும் வரை அவர் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.