தடுப்பு போருக்கு தயார்…12 படை பிரிவுகளும் களமிரங்கும்..எஸ்.என்.பிரதான் அதிரடி

Default Image

பேரிடர் காலக்கட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அதிவிரைவாக ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படையானது செயல்பட்டு வருகிறது.இப்படைகளில் 12 படைப்பிரிவுகள் என மொத்தம் 13 ஆயிரத்து 800 அதிரடி வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

தாய்நாட்டை தற்போது உலுக்கி எடுத்தும் கொலைக்காரக்கொடூரன் கொரோனாவால் நாடு தனிமைப்படுத்தப்படுத்தி நிற்கிறது.தனிமை படுத்தி கொள்வதன் மூலமே இதனை வீரியத்தை குறைக்க முடியும் மேலும் இதன் பாதிப்பு அசுர வேகத்தில் மக்களை தாக்கி உயிரைக் குடித்து வருகிறது.மேலும் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துவருகிறது.144 தடையை மதியுங்கள் மாறாக மிதிக்காதீர்கள்.இவ்வாறு நாடே கொரோனாவால் கடும் சவாலை சந்தித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு தொடர்பான அவசரகால பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில்  இருப்பதாக  தெரிவித்துள்ளது.இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான் கூறுகையில்:கொரோனாவுக்காக மாநில அரசுகள் உருவாக்கிய மாநில கட்டுப்பாட்டு அறைகளில் தேசிய பேரிடர் மீட்பு படையானது முகாமிட்டு உள்ளது. அங்கு தேவைப்படும்போது களத்திற்கு எங்களை அழைக்குமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளோம். எங்களை மாநில அரசுகள் அழைக்கும்போது, ஒரு போருக்கு  எப்படி செல்வோமோ அதனைப்போல் தயாராக உள்ளோம்.தற்போது, பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்  தடுப்பிற்காக எங்களை அழைத்து உள்ளன. ஒரு படைப்பிரிவுக்கு 84 அதிரடி வீரர்கள் வீதம் சிறிய குழுக்களை அங்கு அமைத்து உள்ளோம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்த இதர படைகளை சேர்ந்த 28 ,000 ஆயிரம் பேருக்கு தற்போது இது குறித்த பயிற்சி யை தெளிவாக அளித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.போருக்கு நாங்கள் தயார் என்று நாட்டிற்கு எப்பொழுது எல்லாம் ஆபத்து அதன் கோர முகத்தை காட்டும் பொழுது அதனை எதிர்த்து மக்களை ஆபத்தின் தாக்கத்தில் இருந்து காக்க தங்கள் இன்னுயிரை துச்சமென்று நெஞ்சை நிமிர்த்து காத்து வருகின்றனர் நம் இந்திய காவல்தெய்வங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்