174 மில்லியன் டாலர்களை 64 உலக நாடுகளுக்கு அளித்தது-அமெரிக்கா
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 176 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி உலக மக்களை கடும் அச்சுறுத்தி தனது கோரத்தொற்றால் உயிர்களை காவு வாங்கி வரும் கொலைக்காரக்கொரோனாவிற்கு உலகளவில் செத்து வருகின்றனர். இந்நிலையில் ஒருபுறம் கொரோனா வைரஸ் கொடூரம் என்றால் மறுபுறம் பொருளாதார பேரிழப்பு இரண்டையும் சமாளிக்க உலக நாடுகள் விழிபிதுங்கி வருகிறது.இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பானது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.வல்லரசு என்று மார்த்தட்டி கொண்ட அமெரிக்கா வைரஸ் பாதிப்பில் இத்தாலியை விட அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.இவ்வாறு இருக்க கடந்த பிப்ரவரியில் 100 மில்லியன் டாலர்களை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவியாக அறிவித்தது அமெரிக்கா.தற்போது கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட 64நாடுகளுக்கு 176 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அறிவித்துள்ளது.இதில் இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த தொகையானது ஆய்வக வசதி,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும்,தொழிட்நுட்ப உதவி போன்ற காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. இது குறித்து தெரித்த அமெரிக்க சுகாதாரத்துறை இந்தியாவிற்கு அமெரிக்கா 2.8 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக நிதியுதவியினை செய்து வருகிறது.இதில் சுகாதாரத்துறை தொடர்பாக மட்டும் 1.4 மில்லியன் டாலர்கள் உதவி வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.