#Covid-19 இந்திய இளம் ராணுவ வீரரை தாக்கிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்திய ராணுவத்தை சேர்ந்த இளம் ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .
லடாக் பகுதியை சேர்ந்த இளம் ராணுவ வீரர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதற்க்கு முக்கிய காரணமாக அமைத்திருப்பது அந்த ராணுவ வீரரின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் ஈரானுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு பிப்ரவரி 27 ம் தேதி திரும்பியுள்ளார் .
இதன் பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் .பின்பு இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மார்ச் 6ம் தேதி உறுதிசெய்யப்பட்டிருக்கிறது .
இதற்கிடையில் இந்த இளம் ராணுவ வீரர் விடுப்பில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பை கழிக்க வீட்டிற்கு சென்றுள்ளார் .அவர் மார்ச் 1 ம் தேதி மீண்டும் ராணுவத்தில் இணைய வேண்டியிருந்திருக்கிறது .இந்நிலையில் தந்தைக்கு உதவ விடுப்பை நீட்டித்துள்ளார் .இதனால் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மார்ச் 16 இல் உறுதிசெய்யப்பட்டு தற்பொழுது தனிமை படுத்தப்பட்டுள்ளார் .
ராணுவ வீரரின் தங்கை ,மனைவி இரண்டு குழந்தைகள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .