ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.!ரயிலில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தல்
ரயிலில் பயணம் செய்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பணிபுரியும் 48-வயதான ஒருவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரத்தில் உள்ள ஷியாம்பூரை சேர்ந்தவர். இவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசியாபாத்தில் உள்ள டெஹ்ராடூன் ஜான் சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏறினார்.அவர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டவர் என்றும் அதற்கான பதிலை அறிய காத்திருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான மெசேஜ் வந்துள்ளதாகவும் வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதனையடுத்து ரயிலில் ஏறிய அந்த நபரை ஹரித்வாரில் உள்ள மேளா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டதாக ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரி சரோஜ் நைதானி தெரிவித்தார். மேலும் அவருடன் ரயிலில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.