கேரளாவில் புதியதாக 91 பேருக்கு கொரோனா தொற்று 2,000 த்தை தாண்டியது

Default Image

10 இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .

கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது .நேற்று மட்டும் புதியதாக 91 பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இவர்களில் 53 பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் , இதில் 27 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இவர்ககளுடன் தொடர்பில் இருந்ததாக 10 பேருக்கு கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,095 ஆக உயர்ந்துள்ளது .இதுவரை அங்கு 16 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.இன்று மட்டும் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை  848 பேர் குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் மொத்தம் 2,04,153 பேர்  கண்காணிப்பில் உள்ளதாகவும் , அவற்றில் 1,913 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்