24 மணி நேரத்தில் இந்தியாவில் 28,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்தியாவில் 8,49,553 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,849,435 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,67,783 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,34,621 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக பரவி வருகிறது அந்த வகையில் தமிழ்நாடு,கேரளா,டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.
கேரளா:-
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,439 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,963 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
டெல்லி:-
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,10,921 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,998 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,குணமடைந்தோரின் விகிதம் 79.05 சதவீதமாக அதிகரித்தது. மேலும், ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,334 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா:-
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக,நேற்று ஒரே நாளில் 8,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,46,600 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 223 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,360 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
தமிழ்நாடு:-
தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,591 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…