உலக முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதையை நிலவரப்படி 258 ஆக அதிகரித்துள்ளது. இதில் 219 இந்தியர்கள் மற்றும் 39 வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 இந்தியர்கள் உட்பட ஒரு வெளிநாட்டவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் 64 வயதுக்கு மேற்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
இதையடுத்து 6,700க்கு மேற்பட்டோரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 52, கேரளாவில் 40, உத்தரபிரதேசம் 24, டெல்லி 26, கர்நாடகா 15, தெலுங்கானா 19, ராஜஸ்தானில் 17, ஹரியானா 17, பேரும் கொரோனவால் பாதித்தித்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…