கர்நாடகவில் அனைத்துகட்சி கூட்டம்..முக்கிய முடிகள் எடுக்கப்பட்டதாக தகவல்

Published by
kavitha
கொரோனா  வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இதனால் இந்தியாவில் மட்டும்  பாதித்தவர்களின் எண்ணிக்கை  1000 த்தை நெருங்குகிறது.இந்நிலையில் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.இதன் மூலமாக கர்நாடகத்தில் கொரோனா பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையானது 78 ஆக உயர்ந்து உள்ளது. ஏற்கனவே 3 பேர் மடிந்துள்ள்னர். அங்கு கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் அச்சம் தெரிவித்து வருகின்ற நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அரசு தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க  அறிவுறுத்தப்படுகின்றனர். இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க மாநிலம் முழுவதும் தற்காலிக மருத்துவ மையங்களை கர்நாடக அரசு அமைக்க நடவடிக்கை முடிக்கி விட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு வாரமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். காய்கறி, மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. முன்னாள் முதல்வர் குமாரசாமியும், மாநில அரசை கடுமையாக குறை கூறினார். மேலும் எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் கர்நாடக அரசு சார்பில் கொரோனா குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் நடைபெற்றது.ஆலோசனைக்கூட்டமானது அம்மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
Published by
kavitha

Recent Posts

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

1 hour ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

2 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

4 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

4 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

5 hours ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

6 hours ago