இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 606 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124, கேரளாவில் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இந்தியர்கள் 602 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என 649 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விடப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனவால் உயிரிழப்பின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…