கொரோனா வைரஸ்.! சிங்கப்பூர் செல்வதை தவிர்க்கவும் மத்திய அரசு எச்சரிக்கை .!
- மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
- அப்போது இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதையெடுத்து கொரோனா வைரஸ் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரதுறை, விமானப் போக்குவரத்துத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகங்களின் செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்தியர்கள் சிங்கப்பூர் செல்லும் அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டது.
மேலும் நாளை முதல் இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல்,இருமல் அறிகுறி இருந்தால் விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்படும் என கூறப்பட்டது.ஏற்கனவே சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், போன்ற நாடுகளில் இருந்து பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்தாலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.