இந்தியாவில் 10 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு , இறப்பு எண்ணிக்கை 25,000 ஆக உயர்வு

Published by
Castro Murugan

இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  10 லட்சத்தை கடந்துள்ளது .

உலக அளவில், இதுவரை 13,826,828 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  589,481 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் நாளுக்குநாள் வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது .இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த நோயின் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில்,  1,002,851 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25,543 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 613,735 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள  நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ்  32,682 பாதிக்கப்பட்டுள்ளனர்  இதில்  614 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் -19 பாதிக்கப்பட்டதில் பதிவான மூன்றாவது நாடாகவும், 25,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவுசெய்த எட்டாவது நாடாகவும் இந்தியா உள்ளது.

மாநிலங்களின் நிலவரம் :

மகாராஷ்டிராவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது, இது புனேவில் தினமும் 8000 க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பதிவு செய்து வருகிறது. தமிழ்நாடு தினசரி சுமார் 4,500 என்ற எண்ணிக்கையில் பதிவாகி  வருகிறது, அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முறையே 3000 மற்றும் 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்திலும் தினசரி 1,600 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு  வருவதாகவும், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் தினமும் 1,500 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது .

இதற்கு முன்னர் தொற்றுநோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்திய கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் கடந்த மாதம் ‘ஊரடங்கை தளர்த்துதல் ‘ கட்டம் தொடங்கியதிலிருந்து எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஒரு நாளைக்கு 10 லட்சம் :

எவ்வாறாயினும், கோவிட் -19 இன் மொத்த பாதிக்கப்பட்டவர்களில்  மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தீவிர மருத்துவ மேற்பார்வையில் இருப்பதாகவும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் ஏற்கனவே குணமடைந்து சென்றுவிட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி மாதம் முதன்முதலில் பதிவாகியதிலிருந்து இந்தியா சோதனை திறன்களை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நாங்கள் ” ஒவ்வொரு நாளும் 3.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்து வருகிறோம்,”  வரும் 12 வாரங்களில் ஒரு நாளைக்கு 10 லட்சம் மாதிரிகளை சோதிக்க திட்டமிடப்பட்டுள்தாகவும் தெரிவித்தார் .

Published by
Castro Murugan
Tags: coronavirus

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

2 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

3 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

5 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

7 hours ago