இறந்தவர்களின் உடல் மூலம் கொரோனா பரவுமா? எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது.உலக நாடுகள் மட்டுமல்லாது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.இந்தியாவில் தற்போது வரை 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் உள்ள 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது. தும்மல், இருமல் போன்றவற்றால் தான் கொரோனா பரவும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை எரியூட்டுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.