இந்தியாவில் 20,471 பேருக்கு கொரோனா பாதிப்பு..3,960 பேர் குணம்.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,471 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 652 ஆகவும் உயர்ந்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் விளைவு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அப்படி இருந்தும் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,80,630 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,79,069 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,05,315 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 8,19,321 பேர் பாதிக்கப்பட்டு, 45,355 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வந்த நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,471 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 652 ஆகவும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 3,960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 5221, குஜராத்தில் 2272, டெல்லியில் 2156, ராஜஸ்தானில் 1801, தமிழ்நாட்டில் 1,629, மத்திய பிரதேசத்தில் 1592, உத்தரபிரதேசத்தில் 1412 பேர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025