மூடப்பட்டது..சர்வதேச விமான நிலையங்கள்-மத்திய அரசு அறிவிப்பு
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் மடிந்துள்ளனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து என மத்திய அரசு அறிவித்து உள்ளது.மேலும் இந்த தடை அறிவிப்பு சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.