கொரோனாவிற்கு இந்தியாவிலே மிகப்பெரிய மருத்துவமனையை அமைத்தது-ஒடிசா அரசு
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 16 பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டினுள் இருந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையை அரசு மருத்துவமனையில் அளித்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா சிகிச்சையளிக்க 1000 படுக்கைகள் கொண்ட ஒரு தனி மருத்துவமனையை ஒடிசா அரசு அமைக்கிறது.இது இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையாக இருக்கும் என்றும் இன்னும் 2 வாரத்துக்குள் இம்மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒடிஷா அரசுத்திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.