மார்ச்.,31 வரை ஊரடங்கு-முதல்வர் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச்.,31வரை ராஜஸ்தானில் ஊரடங்கு என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் கூறுகையில் அனைத்து மால்கள் ,பள்ளிகள்,திரையரங்குகள்,சுற்றுலா,போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.ராஜஸ்தானில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவமால் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.லாக் அவு ட் காலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏப்.,1 முதல் 2 மாதக்கால ரேஷன் பொருட்கள் முன் கூட்டியே இலவசமாக வழங்கப்படும் என்றும்,ராஜஸ்தானில் மார்ச்.,31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.