கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 10,000 ஆயிரம் பேரை தனிமைப்படுவதற்கு நாடுமுழுவதும் உள்ள தங்கள் இடங்களை தர தயாராக இருப்பதாக ஜமாயத் உலேமா இ ஹிந்த் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.
கொரோனா வைரஸை உலகளவில் பரவி வருகிறது.இதன் தொற்றுக்கு 7லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 40,000 த்தை நெருங்குகிறது.இந்நிலையில் இந்தியாவில் 1251 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 32பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதன் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இந்தியாவில் கொரோனா மிக வேகமாக பரவி வரும்நிலையில் தொற்று உள்ளதாக சந்தேதிக்கப்படுவர்களை தனிமைப்படுத்தி வைக்க அரசுக்கு சொந்தமான இடங்கள் தவிர பல தனியார்களும் தங்கள் இடங்களை தருவதாக அறிவித்து வரும் நிலையில் ஜமாயத் உலேமா இ ஹிந்த் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000 ஆயிரம் பேரை தனித்து வைப்பதற்காக நாடுமுழுவதும் உள்ள தங்கள் இடங்களை தர தயாராக இருப்பதாக தெரிவித்த அமைப்பு அந்த இடங்களை மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் பகுதிகளாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…