பிரபல Hero நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக Hero நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று 1,251 கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக நாட்டு மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.பிரதமரின் அழைப்பை அடுத்து அரசியல கட்சிகள்,அரசியல் தலைவர்கள்,ராணுவம்,திரையுலகம்,கிரிக்கெட் வீரர்கள் , தொழிலதிபர்கள் என பலரும் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக Hero நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளது.அதில் 50 கோடி நிதியை பிரதமரின் நிவாரண நிதிக்கும்,50 கோடியை கொரோனா தடுப்பு பணிக்கு செலவிடுவதாக தெரிவித்துள்ளது.