பிரதமர் நிவாரண நிதிக்கு 501 ரூபாய் மொய் வைத்த நபர் என்னால் முடிந்த சின்ன உதவி…என்று தெரிவித்தவருக்கு சின்னது பெரியது என எதுவுமில்லை என நிவாரணம் அளித்த நபரை பெருமைப்படுத்தி நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பாரட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக நாட்டு மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
பிரதமரின் அழைப்பை அடுத்து பலரும் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.அவ்வாறு நிதியுதவி அளித்தவர்களில் ஒருவர் தான் சையத் அட்டூர் ரஹ்மான் என்பவர். கொரோனா பாதிப்பிற்கு நிவாரண நிதியாக ரூ. 501 அனுப்பிய இவர் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு சின்ன உதவி என்று தெரிவித்தார்.ரஜ்மான் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி கூறும் விதமாக அவருக்குப் பதிலளித்த பிரதமர் சின்னது பெரிய என எதுவுமில்லை. ஒவ்வொரு தொகையும் முக்கியமே! கோவிட் 19ஐ வீழ்த்த நாம் ஒன்றுபட்டு உறுதியோடு இருப்பதையே இது காட்டுகிறது என நிவாரணம் அளித்தவரை எண்ணி பெருமையோடு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் ,கிரிக்கெட் வீரர்கள் என பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…