ஊரடங்கை மீறி தொழுகைக்கு ஒன்று திரட்டிய இளைஞர் கைது

Published by
kavitha

கொரோனா வைரஸ் ஆனது இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவ  தொடங்கி உள்ளது.இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் வீட்டினுள் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நாடு முழுவதிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு  அமலில் இருக்கும். இதனால் கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் ஆகிய அனைத்து வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்தவும்,மக்கள் ஒன்றுக்கூட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுகூட வேண்டாம் என்றும் தாங்கள் தனித்தனியாக அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்துங்கள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என உ.பி. காவல்துறை கேட்டுக்கொண்டது. காவல்துறையின் வேண்டுகோளை பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்ட நிலையில் இவற்றை தங்கள் சமூகத்தினரிடம் வலியுறுத்தினர். ஆனால் சில அமைப்புகள் உ.பி.யின் புலந்த்ஷெஹர், ஹர்தோய் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தி உள்ளனர்.இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் கூறுகையில் ஜஹாங்கிராபாத் மற்றும் டிபய் ஆகிய பகுதியில் 144 தடை மீறி வழக்கம்போல வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முஸ்லிம்கள் ஒன்று கூடுவதாக தகவல் கிடைத்தது. நாங்கள் நேரில் செல்வதற்குள் பலரும் தப்பி விட்டனர். பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மீறி தொழுகைக்கு ஒன்று திரட்டிய இளைஞர் இமாமை கைது போலீசார் செய்தனர்.மேலும் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.மேலும் ஹர்தோய் மாவட்டத்தில் கடந்த 3 தினத்திற்கு மேலாக பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடையை மீறி ஒன்றுகூடித் தொழுகை நடத்தியதாக சுமார் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் 144 தடையை மீறியதாக இதுவரையில் உ.பி. முழுவதிலும் சுமார் 4,000 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே போல் உத்திரபிரதேசத்தின் மெயின்புரியில் உள்ள காளி கோயிலில் பூஜை செய்வதற்காக  ஒன்றுகூடி 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும்  ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Published by
kavitha

Recent Posts

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி! 

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

59 minutes ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

2 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

2 hours ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

3 hours ago

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

4 hours ago

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

4 hours ago