ஊரடங்கை மீறி தொழுகைக்கு ஒன்று திரட்டிய இளைஞர் கைது
கொரோனா வைரஸ் ஆனது இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கி உள்ளது.இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் வீட்டினுள் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நாடு முழுவதிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதனால் கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் ஆகிய அனைத்து வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்தவும்,மக்கள் ஒன்றுக்கூட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுகூட வேண்டாம் என்றும் தாங்கள் தனித்தனியாக அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்துங்கள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என உ.பி. காவல்துறை கேட்டுக்கொண்டது. காவல்துறையின் வேண்டுகோளை பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்ட நிலையில் இவற்றை தங்கள் சமூகத்தினரிடம் வலியுறுத்தினர். ஆனால் சில அமைப்புகள் உ.பி.யின் புலந்த்ஷெஹர், ஹர்தோய் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தி உள்ளனர்.இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் கூறுகையில் ஜஹாங்கிராபாத் மற்றும் டிபய் ஆகிய பகுதியில் 144 தடை மீறி வழக்கம்போல வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முஸ்லிம்கள் ஒன்று கூடுவதாக தகவல் கிடைத்தது. நாங்கள் நேரில் செல்வதற்குள் பலரும் தப்பி விட்டனர். பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மீறி தொழுகைக்கு ஒன்று திரட்டிய இளைஞர் இமாமை கைது போலீசார் செய்தனர்.மேலும் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.மேலும் ஹர்தோய் மாவட்டத்தில் கடந்த 3 தினத்திற்கு மேலாக பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடையை மீறி ஒன்றுகூடித் தொழுகை நடத்தியதாக சுமார் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் 144 தடையை மீறியதாக இதுவரையில் உ.பி. முழுவதிலும் சுமார் 4,000 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே போல் உத்திரபிரதேசத்தின் மெயின்புரியில் உள்ள காளி கோயிலில் பூஜை செய்வதற்காக ஒன்றுகூடி 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.