மேற்கு வங்கத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

Default Image

மேற்கு வங்கத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்பாடுதா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையிலும், இதன் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில், மாநிலத்தின் தனியார் ஆய்வகங்களில் கோவிட் -19 சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களையடுத்து, மேற்கு வங்க அரசு மாநிலத்தின் தனியார் ஆய்வகங்களில் கோவிட் -19 சோதனையின் விலையை குறைத்துள்ளது.

ஒரு கோவிட் -19 மாதிரி சோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் ரூ .2,250 க்கு மேல் கட்டணம் வசூலிப்பதை தடைசெய்து மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்கான கட்டணங்கள் (பிபிஇ) மற்றும் உட்புற நோயாளிகளுக்கான பிற பொருட்கள் மற்றும் அவர்களின் மருத்துவர் ஆலோசனைக் கட்டணமும் ரூ .1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி கட்டணம் வசூலிப்பவர்களுக்கு, மேற்கு வங்க தொற்றுநோய்க் கோவிட் -19 விதிமுறைகள், 2020 மற்றும் மேற்கு வங்க மருத்துவ நிறுவனங்கள்  சட்டம், 2017 ஆகியவற்றின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் கட்டணங்களை உயர்த்துவதாகவும், மக்களை துன்புறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்