கொரோனா பீதி காரணமாக உ.பி.யில் 11 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக மளிகை கடைகள், காய்கறி கடைகள்,மருந்து கடைகள் தவிர எஞ்சிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கு இடையில் தான் உச்சநீதிமன்றம், கொரோனா வைரஸ் காரணமாக 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படாத குற்றவாளிகளை நிபந்தனையில் விடுதலை செய்ய மாநில அரசுகள் ஆலோசனை செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.எனவேதான் உத்தரபிரதேச அரசு அங்கு சிறைகளில் உள்ள 11000 கைதிகளை அடுத்த 8 வாரங்களுக்கு ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.இதற்காக சிறைத்துறை மாநில அரசுக்கு பரிந்துரை வழங்கிய நிலையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கியுள்ளார்.
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…