ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா!

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,394 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,575 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.