கர்நாடகாவில் விடாத கொரோனா..பாதிப்பு எண்ணிக்கை 30,000-ஐ கடந்தது.!
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,228 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,105 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,105 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 486 அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காரோண தொற்று உயர்ந்தாலும் 957 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 12,833 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 17,782 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.