கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா : இந்தியாவில் 110 ஆக உயர்ந்தது.!
உலக முழுவதும் 127 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா, தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. மேலும், டெல்லி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்தும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்கள், ஆந்திரா 01, டெல்லி 07, ஹரியானா 14, கர்நாடகா 06, கேரளா 22, மகாராஷ்டிரா 32, பஞ்சாப் 1, ராஜஸ்தான் 4, தமிழ்நாடு 01, தெலுங்கானா 03, ஜம்மு-காஷ்மீர் 02, லடாக் 03, உத்தரபிரதேசம் 13, உத்தரகண்டம் 01 என 17 வெளிநாட்டவர் உள்பட இந்தியாவில் மொத்தம் 110 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, நேற்றிய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,735 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,517 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 3,204 உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 048 ஐ எட்டியுள்ளது.