தெலுங்கானாவில் 2 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகரில் 2 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் உள்பட 6 பேரை தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அம்மாநிலத்தில் இதுவரை 766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.