இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 59.06 லட்சத்தை கடந்துள்ளது பாதிப்பு. இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
இதுவரை 165,386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4711 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 70,920 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 7,300 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியத்துடன், 177 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 89,755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.