டெல்லியில் ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா.!
டெல்லியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,844 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,844 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததால், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 403 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8478 ஆக உயர்ந்துள்ள நிலையில், 10,893 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.