டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் இஸ்லாமிய மத கூட்டத்தில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டு ஆந்திரா திரும்பியவர்களில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது (நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை) என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 87 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1397 லிருந்து 1637 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…