கேரளாவில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

கேரளாவில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது – முதல்வர் பினராயி விஜயன்
கேரள மாநிலத்தில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்த 28 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் உட்பட 57 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,326 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று 18 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 608 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தற்போது 708 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.