டெல்லியில் புதிதாக 472 பேருக்கு கொரோனா பாதிப்பு.!
டெல்லியில் இன்று ஒரே நாளில் 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானாதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,470 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் உயிரிழப்பு எதுவும் இல்லாத நிலையில், மொத்தமாக 115 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 187 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதால், மொத்தமாக அம்மாநிலத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,045 ஆக உயர்ந்துள்ளது.